ரயில்வேயில் கடினமான பணிகளில் பெண்களை நியமிக்க திடீர் தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்வேயில் கடினமான பணிகளில் பெண்களை நியமிக்க திடீர் தடை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:எதிர்காலத்தில், பாதுகாப்பில்லாத மற்றும் கடினமான பணிகளில், பெண்களை நியமிப்பதற்கு, ரயில்வே தடை விதித்துள்ளது.
ரயில்வே துறையில் பணியாற்றும், 13லட்சம் ஊழியர்களில், 3 சதவீதம் பெண் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், அலுவலக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.சில பெண்கள், டிரைவர், கார்டுகள் மற்றும், 'டிராக்மேன்'களாக பணிபுரிகின்றனர். இந்த பணிகளில் பாதுகாப்பில்லை என்றும், கடினமாக இருப்பதாகவும், பெண் ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, சில குறிப்பிட்ட பணியிடங்களில் ஆண்களை மட்டும் நியமிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:பணிபுரியும் இடங்களில், பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, வரும் காலத்தில், 'லோகோ பைலட்' எனப்படும் டிரைவர், கார்டுகள், போர்ட்டர், ரயில் வழித்தடங்களை ஆய்வு செய்யும், 'டிராக்மேன்' அல்லது
'கேங்மேன்' போன்ற பணிகளில், ஆண்களை மட்டுமே நியமிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X