'புதிய கல்லூரி துவங்க அனுமதியில்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'புதிய கல்லூரி துவங்க அனுமதியில்லை'

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:''தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது,'' என, துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.
வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகளும், 26 இணைப்பு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளில் அதிகப்படியான புதிய கல்லுாரிகள் துவங்க, பல்கலை நிர்வாக அனுமதி வழங்கியது.
வசதிகள் இல்லை
இக்கல்லுாரிகளில் அடிப்படை கட்டமைப்பு, ஆய்வகம், தகுதியான ஆசிரியர்கள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் அவ்வப்போது எழுந்தன.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை நிறுவனங்கள் துவக்க அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது. புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான விண்ணப்பங்கள், பல்கலை தரப்பில் இதுவரை பெறப்படவில்லை.
புதிய கல்லுாரிகள், கூட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் துவக்க, புதிய விதிமுறைகள் தயார் செய்ய கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகளிலும் சிறப்பு குழுக்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தரம் மேம்பாடு
கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் கூறியதாவது:தற்சமயம் கல்லுாரிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இக்கல்லுாரிகளின் குறைபாடுகள் நீங்கி, தரத்தை மேம்படுத்தவுள்ளோம். இதனால், நடப்பு கல்வியாண்டில் புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. இதுகுறித்து, முன்னரே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால், எழுத்துப்பூர்வமாக எந்த விண்ணப்பங்களும் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
12-ஜன-201918:42:09 IST Report Abuse
rajan.  கல்லூரிகளின் தரம் தான் தரம் மிக்க கல்வித்திறனை பாதுகாக்கும் அம்சமாகும். எனவே நேர்மையான அணுகுமுறை ஓன்று தான் இங்கு தீர்வு. கல்வி ஒரு போதும் வியாபாரமாக கூடாது. அரசியல்வாதிகளின் பினாமிகளிடம் சிக்கி சீரழிந்து விட கூடாது. துணைவேந்தரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X