இயற்கை இடர்பாடு வரி ஏலக்காய் வர்த்தகத்தில் பாதிக்குமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை இடர்பாடு வரி ஏலக்காய் வர்த்தகத்தில் பாதிக்குமா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கம்பம்:இயற்கை இடர்பாடு வரி என்ற பெயரில் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து கூடுதலாக ஒரு சதவீதம் வரி வசூலித்துக் கொள்ள கேரள அரசிற்கு மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இது ஏலக்காய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என விவாதங்கள் நடக்கிறது.கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் மாநில உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டது. ஏலம்,தேயிலை, காபி, ரப்பர், மிளகு உள்ளிட்ட விவசாய நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகின. இன்னமும் மீள முடியாத நிலையில் உள்ளது.இந்நிலையில் மத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கேரள அரசு சார்பில், இயற்கை இடர்பாடு வரி என்ற பெயரில் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்த ஒரு சதவீதம் கூடுதலாக வரி வசூலிக்க அனுமதி கேட்டது. அதற்கு கவுன்சிலும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அனுமதி 2 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏலக்காய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற விவாதத்தில் ஆக்சன் கம்பெனி நிர்வாகங்களும், ஏலக்காய் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். தினமும் லட்சக் கணக்கான கிலோ ஏலக்காய் கொள்முதலில் கம்பம், கோம்பை, தேவாரம் போடி, விருதுநகர், மும்பை, டில்லியை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்பர். இந்த வரிவிதிப்பு இவர்களுக்கு பொருந்துமா எனத்தெரியவில்லை. கம்பம் கேரள கார்டமம் குரோயர்ஸ் யூனியன் தலைவர் டி.கே.எஸ்.உதயக்குமார் கூறுகையில், ''இயற்கை இடர்பாடு வரி ஒரு சதவீதம் கேரளா வணிகவரித்துறையில் பதிவு செய்து வியாபாரம் செய்யும் அம்மாநில வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுகின்றனர். இருந்த போதும், சரியான விளக்கத்தை கேரள மாநில வணிகவரித்துறையினர் கூற வேண்டும்,''என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X