கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் - மாணவி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் - மாணவி சாவு

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் - மாணவி சாவு

விழுப்புரம்:விழுப்புரம் அருகே, மலைக் கோவில் சுனை குளத்தில் மூழ்கி, அரசு கல்லுாரி மாணவர் - மாணவி பரிதாபமாகஇறந்தனர்.
விழுப்புரம், வண்டிமேட்டைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 19; விழுப்புரம் அரசு கல்லுாரியில்,
பி.எஸ்.சி., கணினி அறிவியல், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.உடன் படிக்கும் சுவேதா, 19; ஜெனிபர், 19, ஆகியோருடன், நேற்று காலை, 11:00 மணிக்கு கல்லுாரியில் இருந்து, ஸ்கூட்டியில், விழுப்புரம் அடுத்த பனமலை தாளகிரீஸ்வரர் மலைக் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு, மூவரும் சுவாமி தரிசனம் செய்து, 11:45 மணிக்கு, அங்குள்ள சுனை குளத்திற்கு அருகில் அமர்ந்தனர். சுவேதா, தான் வைத்திருந்த பொறியை மீனுக்கு போட்ட போது, பாசி வழுக்கியதில், நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார்.சுவேதாவை மீட்க, குளத்தில் குதித்த சுந்தர்ராஜும் தண்ணீரில் மூழ்கினார்.அவர்கள் இருவரையும் காப்பாற்ற, தண்ணீரில் இறங்கிய ஜெனிபரின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, ஜெனிபரைமீட்டனர். மற்ற இருவரும் நீரில் மூழ்கியதால், மீட்கமுடியவில்லை.
செஞ்சி தீயணைப்பு படையினர் வந்து, குளத்தில் மூழ்கி இறந்த சுந்தர்ராஜ், சுவேதா ஆகியோரின் உடலை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
16-ஜன-201913:20:33 IST Report Abuse
Jeyakumar Jeyakumar செய்தியை நன்றாக படிக்கவும். அவர்கள் குளிக்க செல்லவில்லை. தவறி விழுந்துள்ளார்கள். வருத்தமான செய்தி.
Rate this:
Share this comment
Cancel
Sampath,manjamedu - coimbatore,இந்தியா
12-ஜன-201920:56:19 IST Report Abuse
Sampath,manjamedu வருத்தமாவும் இருக்கு,கோபமாவும் இருக்கு,கொஞ்சம் கூட உயிர் மேல பயமே இல்லாம,ஏன் அங்க போய் குளிக்கணும், உங்களுக்குத்தான் நீச்சல் தெரியாது இல்ல, அப்புறம் என் அங்க போய் குளிச்சி தொலையறீங்க
Rate this:
Share this comment
Cancel
sivakumar ramamirdham - Qin Huang Dao,சீனா
12-ஜன-201918:34:17 IST Report Abuse
sivakumar ramamirdham பல இடங்களில் இது மாதிரி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கூடி கும்மாளம் அடிக்கும் காட்சியை சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X