ஒற்றுமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை: அமெரிக்க பயணிகள் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றுமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை: அமெரிக்க பயணிகள் பெருமிதம்

Updated : ஜன 12, 2019 | Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஒற்றுமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை: அமெரிக்க பயணிகள் பெருமிதம்

தேனி:வீரபாண்டியில் நடந்த சுற்றுலாத்துறை பொங்கல் விழாவில் அமெரிக்க பயணிகள் பங்கேற்றனர்.

தேனி அருகே வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் வளாகத்தில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாதேவி, குச்சனுார் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேனி தலைமை வகித்தனர். மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். வயல்பட்டி, சத்திரப்பட்டி குழுவினர் தேவராட்டத்தின் பல்வேறு பிரிவுகளை ஆடி பாராட்டு பெற்றனர். அதன் பின் வீரபாண்டி அரசு கலைக் கல்லுாரி மாணவிகளின் கும்மியாட்டம் நடந்தது.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பகுதியில் குடியிருக்கும் லிண்டாமென்டெல்சன், சாண்டி ஸ்மீடிங், மாக்கிகார்டினாக், வால்டீன்கோர்டாஸ் ஆகிய பெண் சுற்றுலாப் பயணிகள் , கும்மியாட்டத்தில் பங்கேற்று ஆடினர்.

அவர்கள் கூறுகையில், '' அமெரிக்காவில் செவிலியர்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்தியா பன்முக கலாச்சார தன்மையுள்ள நாடு என நாங்கள் படித்திருக்கிறோம். தற்போது அதனை நேரில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர் கலாச்சார திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகிறது'', என்றனர். விழாவில் வீரபாண்டி அரசு கலைக் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியை வான்மதி, பொருளாதாரத்துறை பேராசிரியை நளாயினி தலைமையில் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X