வேலை வாய்ப்பு முகாமில் 32 மாணவிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாமில் 32 மாணவிகள் தேர்வு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தேனி:தேனி என்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மாணவிகள் 32 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சென்னை ஷைர்மா (SYRMA) டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி இணைச் செயலாளர் காசிபிரபு தலைமை தாங்கினார். முதல்வர் மதளைசுந்தரம் வாழ்த்தினார். மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகளில் பயின்ற மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட துறை மாணவியர் பங்கேற் றனர்.நிறுவனத்தின் மனித வள அலுவலர் பால்ஹட்சன் தலைமையில் நடந்த நேர்முகத் தேர்வில் 32 மாணவிகள் தேர்வாகினர். இதில், நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் இறுதியாண்டு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறையில் படிக்கும் 12 மாணவிகளும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் 4 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரை லதா மாதவன் பொறியியல் கல்லுாரியின் 5 மாணவிகளும், கோட்டூர் பாலிடெக்னிக் கல்லுாரியின் 8 மாணவிகளும், தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியைச் சேர்ந்த 3 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இம்மாணவிகளுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் முருகன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், கல்லுாரியின் இணைச் செயலாளர் காசிபிரபு, முதல்வர் மதளைசுந்தரம் பணி நியமன ஆணைகளை வழங்கி, பாராட்டினர்.முகாம் ஏற்பாடுகளை கல்லுாரியின் துணை முதல்வர்கள் மாதவன், சிவகணேசன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோனிகா, அர்ச்சனா செய்திருந் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X