ஆங்கில மொழி மதிப்பீட்டு மையம் திறப்பு  | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கில மொழி மதிப்பீட்டு மையம் திறப்பு  

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டு மைய திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை துணை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் அலமேலு வரவேற்றார். மையத்தின் நோக்கம் குறித்து, கல்வி இயக்குனர் எபினேசர் ஜெயக்குமார் விளக்கினார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலை மொழியியல் துறை உதவி இயக்குனர் டேவிட் பார்க்கர் பங்கேற்று, மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள இம்மையத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என, விளக்கினார். மேலும், இக்கல்லுாரியில் நடந்த கேம்பிரிட்ஜ் ஆங்கில திறனறி பயிற்சி தேர்வில், 2 ஆயிரம் மாணவர்களும், 300க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதை பாராட்டினார். மேலும், இத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற, 90 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆங்கில துறை தலைவர் வதனாபென் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X