அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த வெளிநாட்டு பயணியர் அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த வெளிநாட்டு பயணியர் அதிருப்தி

Added : ஜன 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுக்கோட்டை:புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, பொங்கல் விழாவிற்கு, அமைச்சர் வருகைக்காக, அமெரிக்கா சுற்றுலா பயணியரை ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்தது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம் கோட்டை, புதுக்கோட்டை மன்னரின் அரண்மனையில் செயல்படும் கலெக்டர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா
தலங்களாக திகழ்கின்றன.மாவட்டத்திற்குள் வருகை தரும் சுற்றுலா பயணியர், இந்த பகுதிகளை பார்வையிட்டு, ராமேஸ்வரம் அல்லது மதுரைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த, 11 சுற்றுலா பயணியர் பஸ்சில் கலெக்டர் அலுவலகத்திற்கு காலை, 10:00 மணிக்கு வந்தனர்.அங்கு பார்வையிட்ட பின், மதுரைக்கு செல்ல, 10:30 மணிக்கு புறப்பட தயாரான போது, அங்கிருந்த அமைச்சரின் விசுவாச அரசு ஊழியர்கள் சிலர் ஓடிச் சென்று, பஸ்சின் முன்பு நின்று கொண்டு, பயணியரின்வழிகாட்டியிடம் கிசுகிசுத்தனர்.
அவர், 'குறித்த நேரத்தில் மதுரைக்கு செல்ல வேண்டும். இல்லையேல், அமெரிக்க துாதரகத்திற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது' என, கெஞ்சாத குறையாக பதிலை தெரிவித்தும், பஸ்சை நகர்த்த விடாமல் அரசு ஊழியர்கள் நின்று கொண்டனர். இதனால், தவித்த, வழிகாட்டியை, சுற்றுலாபயணியர் கடும் டென்ஷனுடன் திட்டினர்.
அதற்குள் சுகாதார அமைச்சர் பல நிகழ்ச்சிகளை புதுக்கோட்டையில் முடித்துவிட்டு, 11:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, சுற்றுலா பயணியருக்கு மாலை அணிவித்து கவுரவித்து, கைகுலுக்கி, பொங்கல் விழாவில் பங்கேற்று ஒரு சில நிமிடங்களில் விடை கொடுத்து அனுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
12-ஜன-201918:52:03 IST Report Abuse
rajan.  என்னிக்கு ஒழிவானுங்களோ இந்த மாதிரி குட்கா அமைச்சன்மார்கள். ஆட்டைய போட்டு மக்கள் வரிப்பணத்தை ஸ்வாகா பண்ணுற வேலையை தவிர வேறு ஒரு வேலையும் பார்ப்பதில்லை இந்த மக்கள் பிரதிநிதிகள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201906:02:13 IST Report Abuse
Bhaskaran வெளிநாட்டவர்களின் முன் நம் மானத்தை கப்பலேற்றுகின்றனரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X