மாட்டுச்சாணத்தில் கலைப்பொருட்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுச்சாணத்தில் கலைப்பொருட்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உசிலம்பட்டி:நாட்டு மாட்டுச்சாணம், கோமியத்தை பயன்படுத்தி பூஜை, கலைப் பொருட்கள், சோப்பு, கொசுவர்த்தி என மதிப்பு கூட்டு பொருட்களாக்கி விற்பனை செய்து வருகிறார் உசிலம்பட்டி பெருங்காமநல்லூர் கணேசன் 45.அவர் கூறியதாவது: வெளிநாட்டில் பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்தேன். பத்து ஏக்கர் வாங்கி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். இயற்கை விவசாயத்தில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விருதுநகரில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றேன். நாட்டுமாட்டு சாணம், கோமியம் ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரிக்க பயிற்சி வழங்கினர். சாணம் கோமியம் கொண்டு கலைபொருட்களை வடிவமைத்து விற்க பயிற்சி பெற்றேன். அதிகாலையில் கிடைக்கும் சாணம், கோமியம் மட்டுமே கலைப்பொருட்கள் வடிவமைக்கப் பயன்படுகிறது. பத்து நாட்கள் வரை வெயிலில் காய வைப்பதால் ஈரப்பதம் நீங்கி கடினமாகவும், எடை குறைவானதாகவும் மாறும். முதலில் நண்பர்கள் வாங்கினர். கருத்தரங்கு, கண்காட்சியில் காட்சிப்படுத்திய போது வரவேற்பு கிடைத்தது. மாவிலை, தாமரை, சிறு சிறு பறவைகள் என 60 வகையான கலைப்பொருட்களை தற்போது தயாரிக்கிறேன். தேவையான பொருட்களை செய்தும் தருகிறேன் என்றார்.தொடர்புக்கு 99420 85413.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X