இந்தியா, ஆப்பிரிக்கா கலாச்சாரங்களுக்கு ஒற்றுமை : ஆப்பிரிக்க எழுத்தாளர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியா, ஆப்பிரிக்கா கலாச்சாரங்களுக்கு ஒற்றுமை : ஆப்பிரிக்க எழுத்தாளர் பேச்சு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இந்தியா, ஆப்பிரிக்கா கலாச்சாரங்களுக்கு ஒற்றுமை : ஆப்பிரிக்க எழுத்தாளர் பேச்சு

திருப்பரங்குன்றம்:''இந்திய கலாச்சாரமும், ஆப்பிரிக்க கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளது'' என ஆப்பிரிக்க எழுத்தாளர் விலா பமிலா கபூலா தெரிவித்தார்.மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில் ஆப்பிரிக்க இலக்கியம், கலாச்சாரம் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் நேரு தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.ஆப்பிரிக்க எழுத்தாளர் விலா பமிலா கபூலா பேசியதாவது: ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்து எழுதியுள்ள பலர் உண்மையான கலாச்சாரத்தை குறைக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஆப்பிரிக்க கலாச்சாரம் மிகவும் உயர்ந்துள்ளது. இந்திய கலாச்சாரமும், ஆப்பிரிக்க கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுபோல் உள்ளது.ஆப்பிரிக்காவில் திருமணத்திற்குமுன் மணமக்கள் சந்தித்து பேசிவிட்டால் திருமணம் ரத்தாகிவிடும். மணமகன் தண்டனைக்கு உட்படுவார். எந்த விழா நடத்தினாலும் அதிகமாக இசைக்கருவிகள் பயன்படுத்துவர். இந்தியாவின் சம்பிரதாயங்கள், சடங்குகள், காலச்சாரம், பண்பாடுகள் எனக்கு பிடிக்கும்.இந்திய மாணவர்கள் இந்திய கலாச்சாரம் குறித்து புத்தகங்களாக எழுத வேண்டும். ஒரு நாட்டினர் மற்ற நாட்டின் கலாச்சாரங்களை முழுமையாக எழுதுவது என்பது மிகுந்த சிரமம் என்றார்.ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பரிமளநாயகி, விமலா, ரதி, லிங்கேஸ்வரி, ஜீன், பெருமாள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X