பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை விருந்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை விருந்து

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார் : அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் அறுசுவை விருந்து அளித்தது.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கி, 65 ஆண்டு நிறைவடைந்தது. இங்கு 1,300 மாணவர்கள் படிக்கின்றனர். அன்றாடம், 200 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, அறுசுவை விருந்து தர பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று மதியம், 200 மாணவர்களுக்கு, சாதம், சாம்பார், கூட்டு, பொறியல், லட்டு, வடை, பாயாசம், அப்பளம், பழம்ரசம், மோர் என அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. ஆண்டு முழுக்க வழக்கமான சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவ, மாணவியர், அறுசுவை விருந்து உண்டு மகிழ்ந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி, நிர்வாகி கார்த்திகேயன், தலைமை ஆசிரியை ரம்யா, பி.டி.ஓ., ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X