அறிவியல் கண்டுபிடிப்புக்கு கிடைத்தது பரிசு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்டுபிடிப்புக்கு கிடைத்தது பரிசு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெ.நா.பாளையம் : கோவை மாணவி சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக, அரசு சார்பில் வரும், 20ம் தேதி பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு செல்கிறார்.

தமிழக அரசு, அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்த, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இத்திட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும், 50 மாணவ, மாணவியர் தேர்வு செய்து பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு கல்வி பயணம் செல்கின்றனர். அதில், பெ.நா.பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, பிளஸ், 1 மாணவி கவுசல்யா தேர்வாகியுள்ளார். இவர் 'இன்ஸ்பையர் அவார்ட' என்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் முதல் பரிசும், தங்கப்பதக்கமும் பெற்றார். தேசிய அளவில் புதுடில்லியில் நடந்த இன்ஸ்பையர் அவார்டு போட்டியில், மாநில அரசு சார்பில் இவர் பங்கு பெற்று புரொஜக்ட் சான்றிதழை பெற்றார்.

இது குறித்து, மாணவி கவுசல்யா கூறுகையில்,''அதிகளவு நார்ச்சத்துள்ள வாழைத்தண்டில் இருந்து பேப்பர் தயாரிப்பது தான் என் அறிவியல் புரொஜக்ட். நம் நாட்டு கரன்சிகளை அச்சடிக்க, வாழைத்தண்டில் இருந்து உருவாக்கப்படும் பேப்பரை கொண்டு கரன்சிகளை அச்சடிக்க முடியும். இதிலிருந்து பேப்பர் கவர்களையும் தயாரிக்கலாம்'' என்றார். இம்மாதம், 20ம் தேதி பின்லாந்து, ஸ்வீடன் புறப்பட்டு, 30ம் தேதி திரும்புகிறார். முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பள்ளிக்குழு தலைவர் துரைசாமி, ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X