'விஸ்வாசம்' காட்டும் 'மாரி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'விஸ்வாசம்' காட்டும் 'மாரி'

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'விஸ்வாசம்' காட்டும்  'மாரி'

சோழவந்தான்:ஜல்லிக்கட்டு களத்தில் ஆக்ரோஷமாக சீறி பாயும் காளைகள், வீடுகளில் அன்பை அதிகம் பகிரும் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்படுகின்றன.சோழவந்தானில் மருது வளர்க்கும் காளைக்கு ஜெனகை மாரியம்மனை குறிப்பிடும்படி 'மாரி' என பெயர் சூட்டி வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டு பங்கேற்ற போட்டியில் வெற்றிபெற்றது. களத்தில் ஆக்ரோஷமாக இருந்த காளை உரிமையாளரின் குரலுக்கு கட்டுப்பட்டு பம்மி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.மருது கூறியதாவது: எனது தாத்தா காலத்திற்கு பின் காளை வளர்க்கிறோம். நான் எது சாப்பிட்டாலும் மாரிக்கும் தர வேண்டும். அப்பம், பிஸ்கட், பிரட் என அனைத்தையும் விரும்பி சாப்பிடுவான். வீட்டில் சாதுவாக இருந்தாலும் களத்தில் கலக்கிவிடுவான். கன்றுக்குட்டி ஒன்றையும் 'கருப்பு' என பெயரிட்டு வளர்த்து வருகிறேன். அவனும் படு சுட்டி. எனது விசில் சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் துள்ளி குதித்து ஓடி வருவான். பார்ப்பதற்கு ஜல்லிக்கட்டில் துள்ளி விளையாடுவது போல் இருக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X