பாதுகாப்பு துறையில் சேர மாணவர்களுக்கு அழைப்பு; தாய்நாட்டை காக்கும் வாய்ப்பு கிடைக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு துறையில் சேர மாணவர்களுக்கு அழைப்பு; தாய்நாட்டை காக்கும் வாய்ப்பு கிடைக்கும்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை: ''ராணுவத்தில் பணி புரிவதால் பெயர், புகழ் கிடைப்பதோடு, தாய் நாட்டை காக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது'' என சைனிக் பள்ளி விழாவில், துணை ராணுவ தளபதி அன்பு பேசினார்.

உடுமலை, அமராவதிநகர் சைனிக் பள்ளி, 57வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான, ராணுவ துணை தளபதி அன்பு பங்கேற்றார்.கடந்த 1976ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட்ட, ஓவல் மைதான நுழைவாயிலை திறந்து வைத்தார்.கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய, மாணவர்கள், அணிகளுக்கு, பரிசுக்கோப்பையை துணை ராணுவ தளபதி அன்பு வழங்கி பேசுகையில், ''போட்டியும், சவால்களையும் அதிகம் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். வாழ்க்கையில், நல்ல மனிதர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பதற்கு, மாணவர்களுக்குள் தேடல் இருக்க வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ராணுவத்தில் பணி புரிவதால் பெயர், புகழ் கிடைப்பதோடு, தாய் நாட்டை காக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. எனவே, மாணவர்கள் பாதுகாப்புத்துறையில் பணியாற்ற வர வேண்டும்,'' என்றார்.பள்ளி முதல்வர் குரூப் கேப்டன் சிதானா, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பள்ளி மாணவர்கள், தடகளம், உடற்பயிற்சி நடனம், தீ வளையத்திற்குள் தாண்டுதல், பிரமிடு உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் செய்தனர்.நடப்பு கல்வியாண்டில், சிறந்த மாணவருக்கான கேடயத்தை, அருண்பிரபு, சிவசங்கர், வெங்கடேஸ் ஆகியோர் பெற்றனர். விளையாட்டு துறையில், சிறந்து மாணவர்களை கொண்ட பல்லவர் இல்ல அணியும், கலையில் சிறந்து விளங்கியதற்காக சேரர் இல்ல அணியும் வெற்றிக்கோப்பையை பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X