அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் ஜல்லிகட்டு ஜன.,17 நடக்கிறது. இதையொட்டி அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் செல்லுார் ராஜூ முகூர்த்தக்கால் நட்டார். எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். எஸ்.பி., மணிவண்ணன், சர்க்கரை ஆலை தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் பாலாஜி, செயலாளர் ராகவன், பொருளாளர் கணேசன் உட்பட உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.கலெக்டர் கூறுகையில், ''அலங்காநல்லுாரில் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்றும் (ஜன., 12), காளைகளுக்கு ஜன., 14ல் துவங்குகிறது. பாலமேட்டில் ஜன., 13 காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு துவங்குகிறது. பார்வையாளர்கள் அமர கேலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.இந்நிலையில் 24 பேர் கொண்ட ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் நேற்று 11 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X