தேங்காய்களுக்கு தட்டுப்பாடு; விலையும் 'கிடுகிடு' உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய்களுக்கு தட்டுப்பாடு; விலையும் 'கிடுகிடு' உயர்வு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை: உடுமலையில், தேங்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலையும் உயர்ந்து வருகிறது.

உடுமலையில், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையும் அதனைச்சார்ந்த தொழில்களுமே பிரதானமாகவுள்ளது. இங்கு, உற்பத்தியாகும் தேங்காய்களில், 80 சதவீதத்துக்கும் மேல் கொப்பரைக்காக பயன்படுத்தப்படுகிறது. மற்ற, 20 சதவீதம் மட்டுமே உணவு தேவைக்காக விற்கப்படுகிறது.கொப்பரை உற்பத்தியில் நிலவும் தட்டுப்பாடுகள், கிராக்கி உள்ளிட்டவையே தேங்காயின் விலையை நிர்ணயிக்கின்றன. உடுமலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேங்காய் கிலோ, 30 முதல், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

உழவர் சந்தையில் சராசரியாக, 32 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட 'கஜா' புயலால் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.அதன் பின்பு, கொப்பரை உற்பத்திக்கான தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், விலையும் மெல்ல உயர ஆரம்பித்தது. தற்போது பொங்கல் திருநாள் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை மேலும் உயர்ந்துள்ளது.

உழவர் சந்தையில் ஒரு கிலோ, 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய், கடந்த இரண்டு நாட்களாக, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோவுக்கு, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.வெளிப்புற கடைகளில் எடை அளவில்லாமல் தேங்காய் எண்ணிக்கையில் விற்பனை செய்கின்றனர். தேங்காய் ஒன்று, 35 முதல், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X