உடலில்தான் ஊனம்... மனதில் இல்லையே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடலில்தான் ஊனம்... மனதில் இல்லையே

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசி:உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்பார்கள். தன்னுடைய வருமானத்திற்காக மனிதராகப் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும் தன்னுடைய வருமானத்தை மட்டும்தான் பார்ப்பர். ஆனால் அந்த உழைப்பும் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். கை, கால் நன்றாக இருக்கும் பலரும் வேலை இல்லாமல் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு மற்றவர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பர். மற்றவரின் உழைப்பில் கிடைக்கும் சுகத்தை கொண்டு சோம்பேறியாக பொழுதுபோக்கிக் கொண்டிருப்பர். இவர்கள் வேலை கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு வேலையாகினும் அதற்கு கண்டிப்பாக உடலில் வலு வேண்டும். ஆனால் எவரையும் நம்பி இல்லாமல் சைக்கிள், டூ வீலர் பஞ்சர் பார்க்கும் தொழில் செய்து வருகிறார் திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கதிரேசன் 42. பிறவியிலேயே கை , கால் ஊனமுற்ற இவர் ,'உடல்தான் ஊனம் மனதில் இல்லை' என்பதன் படி கடினமாக உழைக்கிறார். பெரியார் நகரில் சிறிய அளவில் சைக்கிள், டூவீலர் பஞ்சர் பார்க்கும் கடை வைத்து நடத்துவதோடு, தெரிந்தவர்கள் அழைத்தால் தன்னுடைய 3 சக்கர சைக்கிளில் பஞ்சர் பார்க்கப் பயன்படும் பொருட்களை எடுத்துக் கொண்டு 5 கி.மீ., துாரம் வரை சென்று வாகனத்திற்கு பஞ்சர் பார்க்கிறார்.கதிரேசன், ''ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இத்தொழிலை கற்று சிறிய கடை வைத்துள்ளேன். தெரிந்தவர்கள் அழைத்தால் 3 சக்கர சைக்கிளில் சென்று பஞ்சர் பார்த்து வருகிறேன். 3 சக்கர மோட்டார் சைக்கிளுக்கு எத்தனையோ முறை அரசிடம் மனு கொடுத்தும் பலனில்லை. மோட்டார் சைக்கிள் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. வாகனம் கிடைத்தால் எவ்வளவு துாரம் என்றாலும் சென்று எனது தொழிலை பார்ப்பேன் ,'' என்றார். இவரை வாழ்த்த 98948 90810.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X