திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை : 'கூடாரவல்லி' உற்சவத்தையொட்டி, உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருப்பாவை நோன்பிருக்கும், மார்கழி மாதத்தின் இறுதி உற்சவமாக 'கூடாரவல்லி', உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை நடந்தது. அதிகாலை முதல், பஜன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திருப்பாவை பாடல்களை பாடி, பெருமாளை வழிபட்டனர்.காலை, 11:00 மணிக்கு, ரங்கமன்னார் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், ஆண்டாள் ரங்கமன்னார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருக்கல்யாணத்தையொட்டி, பக்தர்களுக்கு மங்கலக்கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X