பள்ளி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்; மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்; மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அசத்தல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை: தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பொங்கல் விழா நடந்தது.

விழாவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். உடுமலை மாவட்டக்கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். விழாவின் துவக்கமாக, மாசுகட்டுபாட்டு வாரியம் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து, சுற்றுச்சூழல் பொங்கல் வைத்தனர். திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம்(திருப்பூர் தெற்கு மண்டலம்), மாணவர்களுக்கு புகையில்லாமல் போகி கொண்டாடுவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பொங்கல் வழிபாடு நடத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவியரின் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சத்யபாமா, கிராம கல்விக்குழு தலைவர் கிருஷ்ணவேணி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயா, பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் அருணகிரியின் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவில், கல்லுாரி செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். மாணவியரின் ஆரவாரத்துடன் பேராசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து கோ பூஜை நடந்தது. மாணவியரின் கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. வீர விளையாட்டுகளாக உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி பேரவை மன்ற ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி மற்றும் மன்ற பேராசிரியர்கள் செய்திருந்தனர்.உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் பாரம்பரிய நடனங்களோடு, பொங்கல்விழா நடந்தது.விழாவில், ஆர்.கே.ஆர்., கல்விக்குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, சூரியப் பொங்கல், மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து குழந்தைகளின் கிராமிய நடனத்தோடு கலைநிகழ்ச்சிகள் துவங்கியது. மாணவர்களின் சிலம்பாட்டம், மாணவியரின் கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டுபுற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.குடிமங்கலம்குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி தலைமை வகித்தார். மாணவர்கள், வண்ண உடைகள் அணிந்து பொங்கலை கொண்டாடினர். மாணவர்கள், உற்சாகத்தில் குலவை சத்தமிட, ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர். மாணவியர் கும்மியடித்து பாட்டு பாடினர்.விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா மற்றும் உறுப்பினர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், பெற்றோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X