மண்டல அளவிலான தடகள போட்டி; ருத்ரவேணி பாலிடெக்னிக் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல அளவிலான தடகள போட்டி; ருத்ரவேணி பாலிடெக்னிக் வெற்றி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை : கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான குழு மற்றும் தடகளப் போட்டிகளில், ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவையில் நடந்தது. அதில், உடுமலை ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களும் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர்.குழு விளையாட்டுப்போட்டிகளில் ஹாண்ட்பால், கோ-கோ மற்றும் கிரிக்கெட் போட்டிகளிலும், தடகளத்தில், தட்டு எறிதல், 100, 200 மற்றும் 400 மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் மாணவர்கள், விஜய் கார்த்திக், ஜெகவிஷ்ணு, பிரேமலதா மற்றும் மஞ்சுளா தேவி உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.இம்மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த, உடற்கல்வி இயக்குனர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோரை கல்லுாரி இயக்குனர் சுமதி, ஆலோசகர் மஞ்சுளா, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X