தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு; மாதம்தோறும் ஆய்வு நடத்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு; மாதம்தோறும் ஆய்வு நடத்த கோரிக்கை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை : வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு குறித்து, மாதம்தோறும் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதில், குறிப்பிட்ட அளவில் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்வதால், உற்பத்தி அதிகரித்து விலை சரிகிறது. எதிர்பார்த்த விலை இல்லாததால், சாகுபடி செலவுக்குக்கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், நடப்பு பருவத்தில் எந்த பயிர் எத்தனை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது உட்பட தகவல் கிடைக்காததால் விவசாயிகள் ஒரேவித பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால், எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிக்கப்பட வேண்டியுள்ளது.தமிழ்நாடு விழிப்புணர்வு விவசாயிகள் இயக்கத்தலைவர், வேலாயுதம் கூறியதாவது: உடுமலையில், ஒவ்வொரு பருவத்திலும் தக்காளி, கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு உற்பத்தியால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.விளைபொருட்களை இருப்பு வைத்து பாதுகாப்பதற்கான வசதிகளும் இல்லாமல், கீழே கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் முறைகளை மேம்படுத்த வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் பரப்பளவு, விளைபொருட்கள் உற்பத்தி, எந்த மாதத்திலிருந்து கிடைக்கும் என, கண்காணிக்க வேண்டும். நாட்டின் தேவை மற்றும் உற்பத்தியையும் துல்லியமாக கணக்கிட வேண்டும்.அடங்கல் பதிவுகள் ஒவ்வொரு வாரமும் அனைத்து பயிர்களுக்கும் பதிவு செய்ய வேண்டும். கணக்கீட்டின்படி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பயிர்கள் சாகுபடி குறித்து வழிகாட்டுதல் வேண்டும்.தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பில் பயிர்சாகுபடிக்கான முறையான தொழில்நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு, இயற்கை வேளாண், பயிர் சாகுபடி பருவம், ரகம் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X