உணவில் கலப்படத்தை கண்டறிதல் செயல்விளக்க பயிற்சி வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவில் கலப்படத்தை கண்டறிதல் செயல்விளக்க பயிற்சி வகுப்பு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை: உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'உணவு கலப்படத்தை எளிய முறையில் கண்டறிதல்', செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது.

உணவுப்பொருட்களில், எளிதில் கண்டறிய முடியாத வகையில் பல்வேறு கலப்பட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. காய்கறிகள், எண்ணெய், பழ வகைகள், குழந்தைகள் உண்ணும் சிற்றுண்டிகள், தானியங்கள், பருப்பு வகைகள் என அனைத்திலுமே கலப்படம் நிறைந்துள்ளது.நுகர்வோர், இவ்வாறு உள்ள கலப்படங்களை கண்டறியும் வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறை மூலம் உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.உடுமலை, பல்லடம், குடிமங்கலம், பொங்கலுார் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த குறிப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் பணிகள், மற்றும் உணவுகளில் எவ்வாறு கலப்படம் நடக்கிறது, அதை எளிமையாக கண்டறியும் வழிமுறைகள், கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, அதன் தரத்தை சோதிப்பது, உணவு பொருட்களில், கண்களில் புலப்படாமல் எவ்வாறு கலப்படம் நடக்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.உடுமலை, பல்லடம் மற்றும் குடிமங்கலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அம்ஜத் இப்ராகிம்கான், கேசவ்ராஜ் மற்றும் லோகநாதன் ஆகியோர் விளக்கமளித்தனர்.மேலும், மாணவர்களுக்கு, கலப்பட மற்றும் கலப்படமில்லாத பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, எவ்வாறு கலப்படம் நடக்கிறது என்பது குறித்தும், செயல்விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X