80 சதவீதத்திற்கும் மேல் பொங்கல் தொகுப்பு வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

80 சதவீதத்திற்கும் மேல் பொங்கல் தொகுப்பு வினியோகம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், பொங்கல் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்குகிறது.உடுமலை தாலுகாவில், 127 முழு நேர ரேஷன் கடைகள், 56 பகுதி நேர கடைகள் என, 183 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு லட்சத்து, 3 ஆயிரத்து, 707 ரேஷன் கார்டுகள் உள்ளன. மடத்துக்குளம் தாலுகாவில், 40 முழு நேரம், 23 பகுதி நேரம் என 63 ரேஷன் கடைகளில், 33,692 கார்டுகள் உள்ளன.ரேஷன் கடைகளில், கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. நேற்று வரை, உடுமலை தாலுகாவில், 81 சதவீதம் பேரும், மடத்துக்குளம் தாலுகாவில், 83 சதவீதம் பேரும், அரசின் பொங்கல் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், ஆயிரம் ரூபாய் பணம் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சர்க்கரை கார்டுகளுக்கும் பணம் வழங்கப்பட்டது.பண்டகமில்லாத ரேஷன் கார்டுகள், உடுமலை தாலுகாவில், 195ம், மடத்துக்குளம் தாலுகாவில், 9ம் உள்ளன. இந்த கார்டுகளுக்கு மட்டும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான மக்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் பொருட்கள் வாங்கி விட்டதால், ரேஷன் கடைகளில் கூட்டம் குறைந்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X