மாணவர் எண்ணிக்கை குறைவால் திருப்பி அனுப்பப்படும் சிறப்பு கட்டணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் எண்ணிக்கை குறைவால் திருப்பி அனுப்பப்படும் சிறப்பு கட்டணம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்பு கட்டணம் மாணவர் எண்ணிக்கை குறைவால் திருப்பி அனுப்பப்படும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த கட்டண தொகையை அரசே வழங்கி வருகிறது.மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நிதி பள்ளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது. இதன்படி 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஒரு மாணவருக்கு 29 ரூபாயும், 9-10-ம் வகுப்பு மாணவருக்கு 41 ரூபாயும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களில் அறிவியல் பிரிவுக்கு 93, தொழில் கல்விக்கு 83, கலைப்பிரிவுக்கு 63 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2017-18 கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2 லட்சம் ரூபாய் வரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 4 லட்சம் திருப்பி அனுப்பப்பட உள்ளது.இதனால், வருகின்ற கல்வி ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X