சமத்துவ பொங்கல்: நடனமாடி மகிழ்ந்த மாணவர்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்: நடனமாடி மகிழ்ந்த மாணவர்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார் : பந்தலுார், தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கலில் மாணவர்கள்; ஆசிரியர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.பந்தலுார் அருகே, தேவாலா அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர் நிரஞ்சலாதேவி வரவேற்றார். தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கூடலுார் கல்லுாரி முதல்வர் சுரேஷ், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்ரமணியம் பங்கேற்று, பொங்கல் விழாவின் சிறப்பு குறித்து, மாணவர்களிடம் பேசினர்.தொடர்ந்து, பழங்குடியினர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து, பொங்கல் வைத்தனர். பொங்கிய நேரத்தில் பொங்கல் பானையை சுற்றிலும் நின்று கும்மியடித்து நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பி.டி.ஏ. தலைவர் கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி தர்சினிதேவி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X