துாய்மை மாவட்டமாக மாற்ற கலெக்டர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை மாவட்டமாக மாற்ற கலெக்டர் அறிவுரை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குன்னுார் : 'சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்து, நம் மாவட்டத்தை துாய்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் பர்லியார் சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில், மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:'மக்களை தேடி அரசு' என்ற நோக்கத்தில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் மக்களை தேடி வந்து முகாம் நடத்துகின்றனர். வளர்ச்சி குறைந்த கிராமங்களை கண்டறிந்து தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் கட்டாயம் கழிப்பிடம் கட்ட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணிகளை தேர்வு செய்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ளலாம். 'போஷான் அபியான்' திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவான மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை கண்டறிந்து தேவையான ஊட்டச்சத்து வழங்கி பராமரிக்கப்படுகிறது.மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்த்து, பிள்ளைகளை கல்வி கற்க செய்ய வேண்டும். பெண்கள் அனைவரும் குழுக்களாக சேர்ந்து கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும். நீலகிரியை துாய்மையான வளமான மாவட்டமாக மாற்ற பழங்குடியினர் உட்பட அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.தொடர்ந்து, 9 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை; 31 பேருக்கு ஜாதி சான்றிதழ், 16 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், 'சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, உத்தரவிட்டார்.முகாமில், கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் கீதாபிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, எஸ்டேட் அங்கன்வாடி மையம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X