குன்னுாரில் பனியின் தாக்கம் மலர்களை பாதுகாக்க தண்ணீர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் பனியின் தாக்கம் மலர்களை பாதுகாக்க தண்ணீர்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி : குன்னுார் சிம்ஸ்பூங்காவில், பனி மற்றும் கடும் வெயிலில் இருந்து, மலர் நாற்றுகளை பாதுகாக்க, தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில், சீசன் நாட்கள் அல்லாத சாதாரண நாட்களில் கூட, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் அரியவகை மரங்கள் உட்பட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உயர்ரக மலர் நாற்றுக்கான நர்சரியில், ஆயிரக்கணக்கான நாற்றுகள் தயார் செய்யப்படுகிறது.மே மாதம் நடக்கும் கோடை சீசனுக்காக பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள நர்சரியில் விதைக்கப்பட்டுள்ள மலர் விதைகள் முளைத்துள்ள நிலையில், நர்சரியில் இருந்து, பாத்திகள்; தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அதில், மலர் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நாற்றுகளை 'கோத்தகிரி மலார்' செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில், பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில், பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், பனிப்பொழிவும் நிலவுவதால், மலர் செடி கருகி வாடாமல் இருக்க, பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்காவில், மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க, தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X