மாநில குத்துச்சண்டை போட்டி தும்மனட்டி பள்ளி வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில குத்துச்சண்டை போட்டி தும்மனட்டி பள்ளி வெற்றி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி : ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.சேலம் மாவட்டத்தில், மண்டல அளவிலான குத்து சண்டை போட்டி நடந்தது. இப்போட்டில், பல்வேறு பகுதி, மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிரஞ்சன் மற்றும் சரண்குமார் ஆகியோர், முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.இந்த வெற்றியின் மூலம், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை அமுதவல்லி தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் மாதன் பங்கேற்று மாணவர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X