போக்குவரத்து விதிகளை அறிய மின்னணு தகவல் பலகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதிகளை அறிய மின்னணு தகவல் பலகை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: ஊட்டி, சேரிங்கிராசில் போலீசார் சார்பில் மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி நகருக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. போலீசார் சார்பில், 'போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து விதிகளை சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் 'மின்னணு தகவல் பலகை' மூலம் தெரிந்துகொள்ளும் வகையில், சேரிங்கிராசில் போலீசார் சார்பில், புதிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டது.இதனை இயக்கி வைத்து, எஸ்.பி., சண்முகபிரியா கூறுகையில், '' போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X