ஊரை சுத்தமாக வைத்திருந்தால் மருத்துவச் செலவை தடுக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரை சுத்தமாக வைத்திருந்தால் மருத்துவச் செலவை தடுக்கலாம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஊரை சுத்தமாக வைத்திருந்தால்  மருத்துவச் செலவை தடுக்கலாம்

சிவகங்கை:''ஊரை சுத்தமாக வைத்திருந்தால் மருத்துவ செலவை தடுக்கலாம்,'' என சிவகங்கையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.அவர் நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் துாய்மை இந்தியா திட்டத்தில் குப்பையை சுத்தப்படுத்தினார். அவருடன் இணைந்து அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., கவர்னரின் கூடுதல் செயலர் ராஜகோபால், கலெக்டர் ஜெயகாந்தன், ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், ஜெயச்சந்திரன் எஸ்.பி., துாய்மை பணியில் ஈடுபட்டனர்.கவர்னர் பேசியதாவது: சிவனும், புனித நதியான கங்கையும் இணைந்தது தான் சிவகங்கை. கங்கையை துாய்மைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததைபோல், சிவகங்கை நகரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். துாய்மை நகரில் சிவகங்கை இந்தியாவிலேயே முதலிடம் பெற வேண்டும். இதற்காக அதிகாரிகள், குடிமக்கள் முயற்சிக்க வேண்டும். மாணவர்களும் துணையாக இருக்க வேண்டும். முதலில் தங்களது வீடுகளை சுத்தமாக வைக்க வேண்டும்.அன்பாக பேசி சுற்றத்தாரையும் மாற்ற வேண்டும். அப்போது தான் ஊர் துாய்மையாகும். குடும்ப செலவில் 50 சதவீதம் மருத்துவத்திற்கே செல்கிறது. சுத்தமாக இருந்தால் நோய் வராமல் மருத்துவ செலவை தடுக்கலாம், என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்து கொண்டார். பஸ் ஸ்டாண்ட், அரண்மனைவாசலில் ஒவ்வொரு கடையாக சென்ற கவர்னர், ''நகர் சுத்தமாக இருக்க வியாபாரிகள் முயற்சிக்க வேண்டும். அடுத்த முறை யாருக்கும் தெரியாமல் வருவேன். அப்போது துாய்மையாக இருக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மக்களிடம் குறை கேட்டார். மொத்தம் 84 பேர் மனு கொடுத்தனர். மதியம் 2:00 மணிக்கு ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X