நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் ஆர்வம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், நடவு செய்வதற்கு மாற்றாக, நேரடி நெல் விதைப்பில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பருவமழை குறைந்திருந்தாலும், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், கிணற்றுப் பாசனம் மற்றும் ஆற்றுப் பாசன விவசாய நிலங்களில், வழக்கம் போல், நவரை பருவ சாகுபடியை, விவசாயிகள் துவக்கி உள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில், நெல் பயிரிடுவதில், நடவுக்கு மாற்றாக, நேரடி நெல் விதைப்பு முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, வயலக்காவூரைச் சேர்ந்த, விவசாயி குணசேகரன் என்பவர் கூறியதாவது:நெல் பயிர் நடவு முறையில் சாகுபடி செய்ய, நாற்றங்கால் பராமரிப்பு, நாற்று எடுக்க ஆள் கூலி, நடவு செய்ய பெண் தொழிலாளர்களுக்கு கூலி என, ஏக்கருக்கு, 5,000 ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஆனால், நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் ஆளுக்கு, ஒரு நாள் கூலி, 500 ரூபாய் தான். வேலையும் சீக்கிரமாக முடிகிறது.

கடந்த ஆண்டுகளில், இப்பகுதிகளில், நேரடி நெல் விதைப்பின் கிடைத்த மகசூலுக்கும், நடவு முறை மகசூலுக்கும், பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.இதனால், பெரும்பாலான விவசாயிகள், நேரடி நெல் விதைப்பை விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X