தண்டவாளத்தில் ரூ.36.76 லட்சம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் ரூ.36.76 லட்சம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தண்டவாளத்தில் ரூ.36.76 லட்சம்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட 36 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய போலீசார், ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.நேற்று காலை 8:15 மணிக்கு மதுரையில் இருந்து மண்டபம் சென்ற பயணிகள் ரயில் பரமக்குடி பொன்னையாபுரம் ரயில்வே கிராசிங்கை கடந்தது. ரயிலில் இருந்து பார்சல் ஒன்று விழுந்தது. அந்த வழி சென்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமுவேல் மோசஸ் அதை எடுத்தார்.அதிக எடை என்பதால் வீட்டிற்கு கொண்டு செல்லாமல் அருகில் இருந்த கந்தசாமி என்பவரின் டீ கடையில் கொடுத்து, பிறகு வந்து வாங்கிச் செல்வதாக கூறினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவர் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இறங்கி வருவதாகவும், பார்சல் தன்னுடையது எனவும் கூறினார். அவர் ராமநாதபுரம் செட்டியார் தெருவை சேர்ந்த மகேந்திரன் 47, என தெரிந்தது.பார்சலில் ரூபாய் நோட்டுகள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அதை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.அங்கு மகேந்திரன், சாமுவேல் மோசஸ், கந்தசாமியிடம் விசாரணை நடந்தது.'நான் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி. இது என்னுடைய பணம். அதில் 36 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் உள்ளது' என ' என மகேந்திரன் கூறினார். மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிய போது 36 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஹவாலா பணமாக இருக்கலாம் என டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.இன்று பரமக்குடி கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X