4.55 லட்சம் கிலோ எடையுடன் பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4.55 லட்சம் கிலோ எடையுடன் பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 4.55 லட்சம் கிலோ எடையுடன் பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்

ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் 4.55 லட்சம் கிலோ எடையுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட் விரிசல் ஏற்பட்டு டிச., 4 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானது. இதனால் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வர முடியாமல் அவதிப்பட்டனர்.டிச.,8 முதல் ஜன.,5 வரை துாக்கு பாலத்தில் 6.5 டன் புதிய இரும்பு பிளேட் பொருத்தி வலு சேர்த்தனர். துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட்டின் உறுதித் தன்மை, அதிர்வு குறித்து சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர். இதன் பின் ஜன.,7ல் ரயில் இன்ஜின், 21 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.இதனை தொடர்ந்து 4 நாட்களாக பாலத்தில், பயணிகள் இன்றி எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது. 5ம் நாளான நேற்று 4.55 லட்சம் கிலோ எடையுள்ள ரயில் இன்ஜின் 4 ஏ.சி., பெட்டி, 4 படுக்கை பெட்டி என 8 ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டத்தை தென்னக ரயில்வே பாலம் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு தலைமையில், அதிகாரிகள் கண்காணித்தனர்.இந்த ரயில் சோதனையின் போது, துாக்கு பாலத்தில் மட்டும் 20 நிமிடம் வரை ஊர்ந்து சென்றது. அப்போது துாக்கு பாலத்தில் பொருத்திய சென்சார் கருவி மூலம் பாலத்தில் அதிர்வு, விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.இதனால் ஜன.,16ல் பாலத்தில் பயணிகளுடன் ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X