ஸ்டெர்லைட் சார்பில் ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் சார்பில் ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஸ்டெர்லைட் சார்பில் ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள்

துாத்துக்குடி:டெர்லைட் ஆலை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள், துாத்துக்குடியில் நேற்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது.வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெறும் போது, மீண்டும், 100 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு செலவிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதன்படி, ஆறு புதிய சமூக நலத்திட்டங்களை, துாத்துக்குடி மக்கள் மத்தியில் நேற்று அறிமுகப்படுத்தியது.இந்த திட்டங்கள் குறித்து, ஆலையின் துணைத் தலைவர், தனவேல் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, ஆறு மாதங்கள், நாங்கள் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் விருப்படி, ஆறு புதியத் திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.பசுமையானத் துாத்துக்குடி என்ற திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவது.ஆலையைச் சுற்றியுள்ள, 15 கிராமங்களில், 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம்.மாணவர்கள், 1,500 பேர் பயன்பெறும் வகையில், தரமான கல்விச் சாலை.மகளிர் சுயதொழில்மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் - 5000 மகளிர் பயனடையும் வகையில்.இளைஞர்கள் பயன்பெற வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில்.ஆண்டுக்கு, 1.5 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 100 படுக்கை வசதி உடைய பல்நோக்கு மருத்துவமனை. ஆகிய ஆறு திட்டகள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த திட்டங்கள் நிறைவேறும் நாளில், துாத்துக்குடியின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு இருக்கும். ஆலையை மீண்டும் திறப்பதற்கும், இந்த திட்டங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை செய்த, பல்வேறு சமூக நலத்திட்டகளில் இது அடுத்த நிலை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X