பள்ளிகளில் கழிப்பறை வசதி கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் கழிப்பறை வசதி கட்டாயம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதி உட்பட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்காக மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர். திண்டுக்கல், பழநி, வேடசந்துார், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கழிப்பறை வசதி தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த பள்ளிகளில் 7 ஆயிரத்து 292 கழிப்பறைகள் இருப்பதும், அவற்றில் 6 ஆயிரத்து 845 கழிப்பறைகள் பயன்பாட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.கழிப்பறைகளை காலை, மாலையில் சுத்தம் செய்யவும், நோய் தொற்று ஏற்படாமல் பராமரிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் இருக்கும் சில பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் 447 கழிப்பறைகள் பயனற்று இருப்பதும் தெரிய வந்தது. இங்கு ஊரக வளர்ச்சி துறை மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பள்ளிகளில் கழிப்பறையை சீரமைக்க, தண்ணீர் வசதி ஏற்படுத்த முன் வரலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X