புயல் பாதித்த விவசாயிகளுக்கு இலவச நாற்று வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல் பாதித்த விவசாயிகளுக்கு இலவச நாற்று வினியோகம்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திண்டுக்கல்:புயல் பாதித்த விவசாயிகளுக்கு இலவச நாற்று வினியோகம் செய்வதற்கான ஏற்பாட்டில் தோட்டக்கலை அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.'கஜா' புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 600 எக்டேர் பரப்பு தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்தன. குறிப்பாக மலைப்பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. மரங்கள் விழுந்ததில் கொடைக்கானல் கீழ்மலை, சிறுமலை பகுதிகளில் பல எக்டேர் பரப்பில் காபி, ஆரஞ்சு, மிளகு, அவக்கடா சாகுபடி புயலால் சின்னாப்பின்னமாகின. மேல்மலையில் முட்டைக்கோஸ், முள்ளங்கி, கேரட், பூண்டு காய்கறிகள் சாகுபடி கஜாவால் காலியானது. சமவெளிப்பகுதியிலும் சப்போட்டா, மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமாகின. இப்புயலால் 10 ஆயிரத்து 500 தோட்டக்கலை விவசாயிகள் இழப்பை சந்தித்தனர்.தோட்டக்கலை பயிர்கள் நிரந்தர மற்றும் நீண்ட கால பயிர்களாகத் தான் இருக்கும். புயலால் அழிந்த இவற்றை மீண்டும் சாகுபடி செய்வது கடினம். நாற்றுக்கே அதிக பணத்தை செலவிட வேண்டி இருக்கும். இதனால் விவசாயிகள் மாற்று விவசாயத்துக்கு திரும்பும் அவலம் இருந்தது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இலவச நாற்று வழங்க வேண்டும் என 'தினமலர்' செய்தி வெளியிட்டது. இது அரசின் கவனத்துக்கு சென்றது. இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச நாற்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், 'கஜா புயல் பாதித்த விவசாயிகளின் நலன் கருதி, இலவச நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்படும் குழுவினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவைப்படும் நாற்று விவரங்களை கணக்கெடுப்பர். அடுத்த சில மாதங்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X