'புகையில்லா போகி'க்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'புகையில்லா போகி'க்கு அறிவுரை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:'புகையில்லா போகி' பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜன.14ல் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பயன்படுத்திய பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இதனால் காற்று மாசுபடும் அபாயம் உண்டு.இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்காக காலை இறை வணக்கத்தின்போது 'புகையில்லா போகியைக் கொண்டாடுவோம். பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கமாட்டோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம். மாசற்ற போகியை கொண்டாடுவோம். நமக்கு பயன்படாத பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம்' என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க உத்தரவிட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் இவ்வுறுதி மொழியை மாணவர்கள் எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X