முட்டுக்காட்டில் படகு பராமரிப்பு தீவிரம்:பொங்கல் பண்டிகை எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டுக்காட்டில் படகு பராமரிப்பு தீவிரம்:பொங்கல் பண்டிகை எதிரொலி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 முட்டுக்காட்டில் படகு பராமரிப்பு தீவிரம்:பொங்கல் பண்டிகை எதிரொலி

திருப்போரூர்:பொங்கல் பண்டிகையை ஒட்டி, முட்டுக்காடு படகு குழாமில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காட்டில் நீர் விளையாட்டு மையமாக படகுக் குழாம் உள்ளது.

இது, தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது.இங்கு, 23 விசைப்படகுகளும், 10 துடுப்பு படகுகளும், இரண்டு வேக படகுகளும் உள்ளன. வார விடுமுறை நாளில், 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.இந்நிலையில், அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதால், 4,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக நடைபாதை, படகுகளில் உள்ள இருக்கைகள் சரிசெய்யப்படுகின்றன. படகின் வெளிப்புறத்திலும் பராமரிப்பு பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X