காஞ்சிப்பெரியவர் சொல்றதை கேளுங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிப்பெரியவர் சொல்றதை கேளுங்க!

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரிவார தெய்வமாக சூரியபகவானை கருதி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், சூரியனே முழுமுதற்கடவுளாக கருதப்பட்ட மதம் சவுரம். ஒடிசாவிலுள்ள ' கோனார்க்' என்னும் இடத்தில் சூரியனுக்கு கோயில் இருந்தது. கோண அர்க்கம் என்பதே 'கோனார்க்' எனப்படுகிறது. 'சூரியனின் பகுதி' என்பது இதன் பொருள். வெளிநாட்டவரும் வியக்கும் கலைநயம் மிக்க கோயில் இது.அர்க்கன் என்பதற்கு 'சூரியன்' என்பது பொருள். எருக்கம்பூவிற்கு வடமொழியில் 'அர்க்க புஷ்பம்' என்று பெயர். அர்க்க என்பதே தமிழில் 'எருக்கு' என்றானது. சூரியனார் கோவிலின் தலவிருட்சமாக எருக்கு உள்ளது. சூரியனின் அம்சமான எருக்கம்பூவால் விநாயகரை அர்ச்சனை செய்வோருக்கு சூரியனை வழிபட்ட பலன் கிடைக்கும். காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின்குரல் புத்தகத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X