'முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது' கிராம சபையில் ஸ்டாலின் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது' கிராம சபையில் ஸ்டாலின்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது' கிராம சபையில் ஸ்டாலின்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுார் ஊராட்சியில் நேற்று நடந்த, தி.மு.க., கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், ''பழனிசாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது,'' என, கூறினார்.

இள்ளலுார் ஊராட்சியில், நேற்று மாலை நடந்த கிராம சபை கூட்டத்தில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர் இதயவர்மன் தலைமை தாங்கினார். தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பங்கேற்று, பேசியதாவது:'மக்களிடம் செல், மக்களோடு மக்களாக இரு, மக்களின் பிரச்னைகளை அறிந்து தொண்டாற்று' என, முன்னாள் முதல்வர், அண்ணாதுரை சொல்வார். அந்த வழியில் தான், தி.மு.க., செல்கிறது.

தமிழகத்தை ஆளும் பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கு அச்சாரமாக தான், தி.மு.க., கிராம சபையில், மக்களின் கூட்டம் காணப்படுகிறது.கடந்த, எட்டு ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் இல்லை. ஆனால், வரும் தேர்தலில், தி.மு.க., வலுவான இடங்களை பிடிக்கும். இது, மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மோடியின் கார்ப்பரேட் ஆட்சிக்கும், பழனிசாமியின், 'கரப்ஷன், கமிஷன்' ஆட்சிக்கும் கண்டிப்பாக, முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, குறைகளை கேட்ட ஸ்டாலினிடம், 'சாலை, குடிநீர், மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு வசதி முறையாக இல்லை இவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X