பொங்கல் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பொங்கல் விழா

யாகசாலை நகராட்சி பள்ளி

சின்ன காஞ்சிபுரம் யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை டி.உஷாராணி தலைமை வகித்து, தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து, மாணவ - மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.மாணவ - மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி ஆசிரியைகள், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், நவதானிய குழம்பு வைத்து, மாணவர்களுக்கு வழங்கினர்.அரசு கலை கல்லுாரி

செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், அரசியல் அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், பொங்கல் விழா நடத்த, கல்லுாரி முதல்வரிடம், அனுமதி கோரினர்.கடந்தாண்டு நடந்த பிரச்னை காரணமாக, விழா நடத்த முதல்வர் மறுத்துவிட்டார். நுழைவாயில் கதவை, கல்லுாரி நிர்வாகம் பூட்டியது.இதையடுத்து மாணவர்கள், நேற்று காலை, 11:30 மணிக்கு, நுழைவாயிலில் பொங்கல் விழா நடத்தினர். பானையில் பொங்கல் வைத்து, அனைவரும் கொண்டாடினர்.கல்வி துறை அலுவலகங்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், ஊழியர்கள் ஏற்பாட்டில், முதன்மை கல்வி அலுவலர், ஆஞ்சலோ இருதயசாமி செங்கரும்பு வைத்து, பொங்கலிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.இதையடுத்து, டாக்டர் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கலிட்டு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பையனுார் கல்லுாரி

மாமல்லபுரம் அடுத்த, பையனுாரில், வினாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லுாரியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இக்கல்லுாரியில், விரிவுரையாளர்கள், மாணவ - மாணவியர், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து, மங்கல இசை முழங்கி, மண்பானைகளில் பொங்கலிட்டு, விநாயகர் கோவிலில் வழிபட்டனர்.பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் என, போட்டிகள் நடத்தி, பரிசுகள் அளித்தனர். பல்கலைக்கழக வேந்தர் கணேசன் உள்ளிட்டோர், பங்கேற்றனர்.பாலிடெக்னிக் கல்லுாரி

காஞ்சிபுரம் அடுத்த, துாசி பாலிடெக்னிக் கல்லுாரியில், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி தலைவர், டாக்டர் கே.ஆர்.ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஆ.சசிகுமார், சமத்துவ பொங்கலின் பெருமை குறித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X