செய்தி சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

திருப்போரூர்: கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவக் கல்லுாரி சார்பில் நடந்த, பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில், நிர்வாக துணை மேலாளர், சோலையப்பன் தலைமை வகித்தார். இதில், 300க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவு மாணவ - மாணவியர் பங்கேற்று, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.மேலும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணியாக சென்றனர்.

மகர ஜோதி தரிசனம்

திம்மராஜம்பேட்டை: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அய்யப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது. வரும், 14ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலை, 6:00 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

காலாவதி குளிர்பானம் பறிமுதல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதி கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன், பேரூராட்சி, துப்புரவு மேற்பார்வையாளர், தாமோதரன் உள்ளிட்டோர், நேற்று, அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, காலாவதியான குளிர்பான பாட்டில்கள் - 60; சிவப்பு சாயமிட்ட, 3 கிலோ, கோழிக்கறி; தடை செய்யப்பட்ட, 500 கி.கி., பிளாஸ்டிக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பிளாஸ்டிக் விற்பனையாளர் ஒருவருக்கு, 5,000 ரூபாய் உள்ளிட்ட, 9,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இளைஞர் தின விழா

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், ராஜிவ் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினம், நேற்று கொண்டாடப்பட்டது.இதில், குழு விவாதம், கைப்பந்து போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜபுரம் தெருவில், வரசக்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், திருப்பணிகள் செய்யப்பட்டு, நவ., 25ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, தினமும் மாலையில், மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.நேற்று காலை, மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதில், காலை, 9:00 மணிக்கு, வரசக்தி விநாயகருக்கும், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது.

கூடாரவல்லி உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கூடாரவல்லி உற்சவம் நடந்தது.இக்கோவில், பக்த பஜனை குழுவினர், கிராமத்தினர் நலன் வேண்டி, மார்கழி மாத முழுவதும், தினமும் காலை, பஜனை பாடுவர்.கோவிலிலிருந்து, வீதியுலா புறப்பட்டு, வீதிகளில் மேளம், மிருதங்கம் வாசித்து, ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாடி, கோவிலை அடைவர். தற்போதும், பஜனை பாடல்கள் பாடி, உலா செல்லும் அவர்கள், நேற்று, மார்கழி, 27ம் நாளை முன்னிட்டு, வீதியுலா நடந்தது.பின், அலங்கார கிருஷ்ணரை, கோவில் வாயிலில் எழுந்தருள செய்து, கூடாரவல்லி உற்சவம் நடத்தினர். பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X