சட்டம் - ஒழுங்கு பாதிப்பு: பொதுமக்கள் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டம் - ஒழுங்கு பாதிப்பு: பொதுமக்கள் புகார்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை பகுதியில், சட்டம் - ஒழுங்கு பாதித்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் சார்பில், போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.கவரைப்பேட்டையில், ரயில் நிலைய சாலை, ராஜா தெரு, பழவேற்காடு தெரு உள்ளிட்ட பகுதிகளில், பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.கவரைப்பேட்டையில் இயங்கி வந்த காவல் நிலையம், ஆறு மாதங்களுக்கு முன், 8 கி.மீ., உள்ள தச்சூர் பகுதிக்கு, புதிய கட்டடத்தில் மாற்றப்பட்டது. அதன் பின், கவரைப்பேட்டை பகுதியில், போலீசார் ரோந்து பணி மேற்கொள்வது, வெகுவாக குறைந்து வருகிறது.இடைப்பட்ட ஆறு மாத காலத்திற்குள், கவரைப்பேட்டை பகுதியில், சட்டம் - ஒழுங்கு பாதித்து, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள் அதிக அளவில் கூடும், கவரைப்பேட்டை ரயில் நிலைய பகுதியில், சமூக விரோதிகள் சிலர், போதை பொருட்களை விற்பதாக கூறப்படுகிறது.இதுதவிர, இரவு நேரத்தில், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, கவரைப்பேட்டை பகுதியில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவரைப்பேட்டை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X