பள்ளியில் அறிவியல் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பள்ளியில், இரண்டு நாட்கள் அறிவியல் கண்காட்சி நடந்தது.ஊத்துக்கோட்டை கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளியில்,மாணவர்களுக்கு,இரண்டு நாட்கள் அறிவியல் கண்காட்சி நடந்தது.

அகஸ்தியா தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.தலைமையாசிரியர் சேகர் உள்ளிட்ட பலர், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மாதிரிகள் குறித்து, மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.இருபுற கூம்பு மாதிரி, ஆற்றல் அழிவின்மை, ஆற்றல் பரிமாற்றம், மைய விலக்கு விசை, காந்தங்களின் வகைகள், காற்றாலைகள், கிரகணங்கள் தோன்றுதல் ஆகியவை மாதிரிகளாக வைக்கப்பட்டன.

மனித எலும்பு கூடு, மூளை, இதய மாதிரிகள் உள்ளிட்டவையும், கண்காட்சியில் இருந்தன. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:இரண்டு நாட்கள்அறிவியல் நிகழ்ச்சியில்,தொண்டு நிறுவனம் சார்பில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நேற்று, அந்தமாணவர்கள், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளக்கினர்.இந்த நிகழ்ச்சியில் பாடம் சம்பந்தப்பட்டவை மட்டும்வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு தேர்வில் பெரிதும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X