சித்த மருந்து பெட்டகம்: பெண்களுக்கு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருந்து பெட்டகம்: பெண்களுக்கு வழங்கல்

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:அரசு மருத்துவமனை சார்பில், 48 கர்ப்பிணிகளுக்கு, சித்த மருந்துகள் பெட்டகத்தை, துணை இயக்குனர், இளங்கோவன் நேற்று வழங்கினார்.திருத்தணி அரசு பொது மருத்துவ மனையில், சித்த மருத்துவப் பிரிவு இயங்குகிறது.

இப்பிரிவு சார்பில், கர்ப்பிணிகளுக்கு வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சஞ்சீவி சித்த மருந்துகள் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், ஹேமாவதி தலைமை வகித்தார். சித்த மருத்துவர், செல்வகுமார் வரவேற்றார்.

மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர், மருத்துவர் இளங்கோவன் பங்கேற்று, 48 கர்ப்பிணிகளுக்கு, 'அம்மா' மகப்பேறு சஞ்சீவி சித்த மருந்துகள் பெட்டகம் வழங்கினார்.இந்த பெட்டக மருந்துகளால், கர்ப்பிணிகளுக்கு வரும் ரத்தசோகை, வாந்தி, முதுகுவலி, பிரசவத்திற்கு முன் கருவில் உள்ள குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை கிடைக்கும்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களிடம், பெண்கல்வி குறித்து விளக்கப்பட்டது.பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கல்வி கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ், கப், பால் குடிக்கும் பாட்டில், புத்தாடை போன்ற, 9 வகையாக பொருட்கள், குடும்ப நலம் துணை இயக்குனர் இளங்கோவன், இலவசமாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X