'இனி, தக்காளி ரசத்துக்கு வேட்டு! இல்லத்தரசிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இனி, தக்காளி ரசத்துக்கு வேட்டு! இல்லத்தரசிகள் கவலை

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்: உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், தக்காளி செடியில் பூக்கள் உதிர்வது அதிகரித்துள்ளது. செடிகளில் காய் பிடிப்பது குறைந்துள்ளதால், சந்தைக்கு தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தெற்கு உழவர் சந்தைக்கு, 16 டன் தக்காளி வரும். பத்து நாட்களாக படிப்படியாக வரத்து குறைந்து நேற்று, பத்து டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால், ஒரு கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரம், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரி தற்போது விலை குறைந்து கிலோ, 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டை விலை சற்று உயர்ந்து, 38 ரூபாயாகியுள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் பாகல் (கிலோ, 34 ரூபாய்), பீர்க்கன் (கிலோ, 35 ரூபாய்) விலை சற்று உயர்ந்துள்ளது. அதேநேரம் புடலை, சுரைக்காய், முள்ளங்கி விலை உயரவில்லை; முள்ளங்கி கிலோ, பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மலை காய்கறியான கேரட், 35 ரூபாய்; பீன்ஸ் கிலோவுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 50 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த வாரங்களில், 60 முதல், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி தற்போது கிலோ, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சந்தையில் முருங்கை வரத்தே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 15 நாட்களுக்கு முன் ஒரு கட்டு, இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லி, தற்போது பத்து ரூபாய் விற்கப்படுகிறது.வடக்கு உழவர் சந்தைவழக்கமாக வடக்கு உழவர் சந்தைக்கு, 3.50 டன் தக்காளி வரும். பனிப்பொழிவால் வரத்து குறைந்து, தற்போது, 2.60 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதனால், இங்கு ஒரு கிலோ, 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரை தற்போது கிலோ, 25 க்கு விற்கப்படுகிறது. வரத்து மிகுதியால் சின்ன வெங்காயம் விலை கிலோ, 30 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X