அலகுமலை ஜல்லிக்கட்டு கால்கோள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலகுமலை ஜல்லிக்கட்டு கால்கோள் விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொங்கலுார்: அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில், வரும் பிப்ரவரி 3ல், ஜல்லிக்கட்டு திருவிழா நடக்கிறது.இதற்கான கால்கோள் விழா நேற்று கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. காளைகள் நலச்சங்க தலைவர் பழனிசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பொங்கலுார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சிவாசலம் முன்னிலை வகித்தனர்.கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், 'வாடி வாசல்'அமைக்க, கம்பம் நட்டு துவக்கி வைத்தார். எம்.எல்.ஏக்கள் நடராஜன், குணசேகரன், விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், தமிழக ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்.ஜல்லிக்கட்டு காளை கள் நலச்சங்க செயலாளர் துாரன் நம்பி, பொருளாளர் சுப்பிரமணி, துணை தலைவர் மூர்த்தி, இணை செயலாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக அமைச்சர் பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலையில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடக்கிறது. மேற்கு மண்டலத்திலேயே, ஜல்லிக்கட்டை நடத்துவதில் அலகுமலைக்குத்தான் முதலிடம். அருகில் பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளதால், அடுத்த மாதம், 3ம் தேதி வாய்க்காலில் தண்ணீரை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும்.கடந்தாண்டு அதிக மாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கான பதிவை காலை, 10:00 மணியுடன் முடிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X