மாவட்ட சிறை திறப்பு விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட சிறை திறப்பு விழா

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் : பத்து கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட மற்றும் மகளிர் சிறை வளாகத்தை, தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.திருப்பூரில் மாவட்ட சிறை, பெண்கள் சிறை ஆகியன, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை, சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.சிறை வளாகத்தில், நடந்த நிகழ்ச்சியில் வர்ண விளக்குகள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில், துணை ஜெயிலர் குணசேகர், போலீஸ் வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் மணவாளன் குத்து விளக்கேற்றினர். சிறைத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட சிறைக்குடி.எஸ்.பி., அந்தஸ்தில் ஒரு துணை ஜெயிலர், இரண்டு உதவி ஜெயிலர்கள், நான்கு முதன்மை வார்டன்கள் மற்றும் 13 வார்டன்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் எல்லையில், கோர்ட் காவலில் வைக்கப்படும் நபர்கள் இதுவரை கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இங்கு மாவட்ட சிறை அமைக்கப்பட்டதன் மூலம், இனிமேல் இது போன்ற நபர்கள், திருப்பூர் சிறையில் அடைக்கப்படுவர்.இதன் மூலம், போக்குவரத்துக்கான செலவு, கால விரயம் குறைவதோடு பாதுகாப்பு பிரச்னையும் தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X