ஓ.ஏ.பி., பொங்கல் பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓ.ஏ.பி., பொங்கல் பரிசு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: தமிழக அரசு, அனைத்து கார்டுகளுக் கும் பொங்கல் பரிசும், 1000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுமென அறிவித்தது. கோர்ட்டில் மனு செய்யப்பட்டதால் குழப்பம் நிலவிய நிலையில், அனைத்து கார்டுகளுக்கும் வழங்கலாம் என, கோர்ட் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை இணைந்து, வினியோகம் செய்து வருகின்றன. பொதுமக்கள், ரேஷன் கடை முன்பாக, நீண்ட நேரம் காத்திருந்து, பரிசு பெற்றுச்செல்கின்றனர்.ஒவ்வொரு கடைக்கும், தினமும் இரண்டு முதல், மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தை, வங்கியில் இருந்து எடுத்துவர தாமதம் ஏற்படுவதால், பொங்கல் பரிசு வினியோகமும் தாமதமாகிறது.சமூக பாதுகாப்பு திட்டத்தில், ஓய்வூதிய உதவி பெறுவோருக்கும், பொங்கல் பரிசு உண்டு என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 13 ஆயிரத்து,295 ஓய்வூதியம் பெறும் முதியோர்கள், பொங்கல் பரிசுக்கு தகுதி பெற்றுள்ளனர்.ஓய்வூதிய உதவி பெறுவோரில், ரேஷன் கடைகளில், அரிசி அட்டை பெற்றுள்ளவர்களுக்கு மட்டும், பொங்கல் பரிசும், 1,000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறுகையில், ''ஓய்வூதியதாரர்களுக்கும், பொங்கல் பரிசு ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பொருட்களுடன், ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் பெறலாம். அரிசி பெறும் ஓய்வூதியதாரர்கள், தவறாமல் பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X