பள்ளியில் அறிவியல் கண்காட்சி 'ரோபோ' மூலம் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் அறிவியல் கண்காட்சி 'ரோபோ' மூலம் விழிப்புணர்வு

Added : ஜன 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், 'ரோபோ' மூலம், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருத்தணியில் உள்ள, தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.பள்ளியின் தாளாளர், எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர், சத்யா வரவேற்றார். பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.திருத்தணி டி.எஸ்.பி., சேகர் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார். பின், 22 வகுப்பு அறைகளில், மாணவ - மாணவியரால் படைக்கப்பட்டிருந்த மாதிரிகளை பார்வையிட்டார்.

இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்து அசத்தினர்.அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் மற்றும் உடற்கல்வி, யோகா மாதிரிகளை பார்த்து, மாணவ - மாணவியரிடம், அவர் விளக்கம் கேட்டார்.கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த, ரோபோ மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க வேண்டும்; இயற்கையை பாதுகாப்பது குறித்து வைத்திருந்த மாதிரிகள், பார்வையாளர்களை கவர்ந்தது.திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள், நேரில் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X